ஒரே ஆண்டில், 15 வகையான ஊழல்கள் நடந்ததாக புள்ளி விவர ஆதாராங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விரைவில் ஆளுநரை சந்தித்து, புகார் பட்டியல் கொடுக்க போவதாக அறிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை, தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்றார்.