அரசியல்

2 மொழியை பயிலவே மாணவர்கள் கஷ்டப்படும் போது மும்மொழியா? - கே. எஸ். அழகிரி கேள்வி

நமது மாணவர்கள் இரண்டு மொழியை பயிலவே கஷ்டப்படுகிற நிலையில் மும்மொழியை எப்படி பயில்வார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

தந்தி டிவி
நமது மாணவர்கள் இரண்டு மொழியை பயிலவே கஷ்டப்படுகிற நிலையில் மும்மொழியை எப்படி பயில்வார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார். சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஏற்கும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்பதே காங்கிரஸின் கொள்கை என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தி திணிப்பு என்று ஒவ்வொன்றாக தமிழ் நாட்டில் நுழைக்க முயற்சி செய்கிறது என்றும் அந்த ஆபத்தை தடுக்கும் சக்தி தி.மு.க. கூட்டணிக்கு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்