அரசியல்

"அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் ஏற்றுக் கொள்வேன்.." - அமைச்சர் சுரேஷ் கோபி

தந்தி டிவி

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகரான மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, சினிமா தனது ஃபேஷன் என தெரிவித்தார். தொடர்ந்து திரைத்துறையில் நீடிக்க கட்சி தலைமையிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் திரைத்துறையில் நீடித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விளக்குவதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் எனவும் கூறினார். அமைச்சர் பதவியை பாதிக்காத வகையில் படப்பிடிப்பு நடத்திட ஆசை உள்ளதாகவும், செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கும் ஒற்றைக்கொம்பன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறினார். திரை துறையில் நீடிக்க வில்லை என்றால் உயிரிழந்து விடுவேன் என்ற சுரேஷ் கோபி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் திருச்சூர் தொகுதி மக்களுக்காக கூடுதல் நேரம் செலவிட்டு பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்