நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, செயல்பட்டதை சுட்டிக்காட்டி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக, தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், தள்ளிவைக்க கோரி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.