அரசியல்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டது? - ஸ்டாலின் கேள்வி

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது, 2 புள்ளி 42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டதா என்பதை விளக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது, 2 புள்ளி 42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டதா என்பதை விளக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்முனைவோர் எல்லாம், தொழில் துவங்க அண்டை மாநிலம் நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநாட்டில் குஜராத்திலிருந்து மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு எப்படி கிடைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா நடத்திய முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 2.42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்போவதாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

முதலீடுகள் பெறப்பட்டிருந்தால், சரியான தரவுகளுடன் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்குத் தன்னம்பிக்கை இல்லை என்றும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது, 2 புள்ளி 42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டதா என்பதை விளக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்