* தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் நடந்த தி.மு.க சிறுபான்மையினர் அணி ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறு பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, வரும் செப்டம்பர் 24ஆம் தேதியன்று ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.