அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலையை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு , கனவாகதான் இருக்கும் என்றும், அதிமுக ஆட்சி வரும் 2021 ஆம் ஆண்டு வரை தொடரும் என்று கூறினார்.