சட்டப்பேரவையில் எவ்வித விரோத உணர்ச்சிக்கு வழிகொடுக்கமால் ஆளுக்கட்சி செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அவையில் சபாநாயகர் அப்பாவுவை வாழ்த்தி பேசிய அவர், மரபு வழிநின்று சட்டப்பேரவையை ஜனநாயக மாண்புடன் நடத்துவீர்கள் என்பதில் யாருக்கும் எள் அளவும் சந்தேகமில்லை எனக் கூறினார். மேலும், முந்தைய பேரவைத் தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் அவைக்கு பெருமை சேர்த்தது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.