தகைசால் தமிழர் விருது பெற்ற தந்தை | எழுந்து நின்று கைதட்டி நெகிழ்ந்த செளமியா அன்புமணி
தகைசால் தமிழர் விருது பெற்ற செளமியா அன்புமணியின் தந்தை தமிழ்நாட்டிற்காக சிறப்பான பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் தகைசால் தமிழர் விருது, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி. எம்.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது. அப்போது விருது பெற்ற தனது தந்தையை, சட்டமன்ற உறுப்பினர் செளமியா அன்புமணி கைத்தட்டி, மகிழ்ச்சியுடன் பாராட்டிய நெகிழ்ச்சியான தருணம் இடம்பெற்றது.