பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவத்திற்கு, மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாரை இழிவு படுத்துவது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் இழிவு படுத்தும் செயல் என்றார். எனவே, தவறு செய்தவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் உறுதி அளித்தார்.
"மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை"
உடன்குடி மின்திட்டம், பொதுமக்களின் கருத்தை அறிந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.