#vck #thirumavalavan கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்ட கட்சி நிர்வாகியின் காதணி விழாவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் நின்றிருந்த அவரைச் சந்திக்கத் தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் உண்டானது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற திருமாவளவன், தொண்டர்களைக் கைகளால் இடித்துத் தள்ளியும், "தள்ளாமல் நில்லுங்கள்" என ஆக்ரோஷமாகவும் பேசியது திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.