அரசியல்

செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார்

கூட்டுறவு துறை பணக்கார துறை, செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை தண்டையார்பேட்டையில், கூட்டுறவுத்துறை சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனின் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர், பங்க்கை திறந்து வைத்தனர். விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை பணக்காரத்துறை என்றும், பணக்கார அமைச்சரான செல்லூர் ராஜூ இங்கு உள்ளதாகவும் கூறினார். இப்பகுதியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஜெயக்குமாரின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அதே மேடையில் உறுதியளித்தார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்