பறக்கும் படை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய சீமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனது காரை சோதனையிட முயன்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பினார். புதுவயல் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தனது காரில் சீமான் வந்து கொண்டிருந்தார். அப்போது இந்த சம்பவம் அரங்கேறியது.