அரசியல்

"இந்த கொடுமையை அரசு வேடிக்கை பார்க்கிறது" - ஆவேசப்பட்ட சீமான்

தந்தி டிவி

வாடிக்கையாளர்களின் சேமிப்பை நூதன முறையில் அபகரிக்கும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் வங்கிகள், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து எவ்வித முன் அனுமதியும் பெறாமல், காப்பீடு என்ற பெயரில், சந்தா தொகையைத் தானாக எடுத்துக் கொள்வதோடு, அதற்கு ஜி.எஸ்.டி வரியும் விதிப்பதென்பது, வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். தனியார் வங்கிகளின் இத்தகைய பகற்கொள்ளையை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசின் அலட்சியப்போக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC