அரசியல்

"ராகுல் காந்திக்கு பெண் பாருங்கள்.." பெண் விவசாயிக்கு சோனியா 'நச்' பதில் - "இந்த மாதிரியான பெண் தான் வேணும்" - வைரலாக பரவும் வீடியோ

தந்தி டிவி

அரியானாவை சேர்ந்த பெண் விவசாயியிடம், ராகுல் காந்திக்கு திருமணம் செய்ய நீங்களே பெண் பாருங்கள் என சோனியா காந்தி கூறிய சுவாரஸ்ய நிகழ்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் என கூறப்படும் ராகுல் காந்திக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி பல வருடங்களாக அவரை வட்டமடித்து வருகிறது.

சிங்கிளாக சுற்றி வரும் ராகுல் காந்திக்கு தற்போது 52 வயதாகிறது. அரசியல் கட்சித்தலைவர்களும், பொதுமக்களும் பலமுறை எப்போது திருமணம், விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் ராகுல் என கூறிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை அரியானாவை சேர்ந்த பெண் விவசாயிகளுடன் கலந்துரையாடிய வீடியோ வெளியானது.

அதில், பெண் விவசாயி ஒருவர், ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று சோனியா காந்தியிடம் கொஞ்சும் குரலில் கேட்கிறார். அதனை கேட்ட வேகத்தில் பதிலளித்த சோனியா காந்தி, 'நீங்களே பெண் பாருங்கள்" என நகைச்சுவையாக கூற..அங்கு சிரிப்பலை எழுந்தது.

இந்த வீடியோவை ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், பலரும் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்து இத்தாலி நாளிதழுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் தெரியவில்லை.. ஆனால் கடமைகள் நிறையவுள்ளது எனினும், எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு தனது தாயார் சோனியா காந்தி, பாட்டி, இந்திரா காந்தி போன்ற குணமுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசையென்றும் தனது விருப்பத்தை ராகுல்காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்