அரசியல்

11ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை - "ஆக.7 முதல் ஆக.18 வரை..." - வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

11ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு மூலம் உதவித்தொகை வழங்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது...

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வி ஆண்டில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனறி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமையை கண்டறியவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் நடத்தப்படும் இந்த தேர்வு மூலமாக, 500 மாணவிகள், 500 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், கொள்குறி வகையில் இரண்டு தாள்களாக போட்டித் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு வரும் ஏழாம் தேதி முதல் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டு, தேர்வு செய்யப்படும் ஆயிரம் மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு