அரசியல்

சசிகலா 27 - ம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தகவல்

சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.

தந்தி டிவி

சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.சசிகலாவை, திட்டமிட்டபடி, 27 ஆம் தேதி விடுதலை செய்ய்பபடுவதற்கான பூர்வாங்க பணிகள், நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை குடியரசு தினம் என்பதால் நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் அதிகம் இருக்கும் என்பதால் சசிகலாவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இன்றைய தினமே தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து, வரும், 27 ஆம் தேதி காலை பத்தரை மணி அளவில், சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிடம் விடுதலை தொடர்பான பத்திரங்களில் கையெழுத்து பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது சிறைக் கைதியாக இருக்கும் சசிகலாவுக்கு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. சிறையில் அவர் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், சிறையில் சம்பளம் வழங்கும் எந்த பணியையும் அவர் தேர்வு செய்து பணியாற்றவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகும் சூழலில் அன்றைய தினமே உடல் நலத்தில் முழுமையான முன்னேற்றம் அடைந்திருப்பதை மருத்துவமனை உறுதி செய்யும் பட்சத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட வாய்ப்புகள் உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை