அரசியல்

நாட்டை உலுக்கிய மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு.. சஞ்சய் சிங் காங்கிரஸ் மீது புகார்

தந்தி டிவி

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை வினேஷ் போகத்தும் பஜ்ரங் புனியாவும் நிரூபித்துள்ளதாக மல்யுத்த வீரர்கள் சம்மேள தலைவர் சஞ்செய் சிங் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக அமைச்சருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் புகார் தெரிவித்த மல்யுத்த வீரர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பின் நாடு திரும்பிய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்யுத்த வீரர்கள் சம்மேள தலைவர் சஞ்செய் சிங், மல்யுத்த வீரர்கள் புனியாவும் வினேசும் காங்கிரசில் இணைந்ததன் மூலம், மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள் என நிரூபித்துள்ளதாக தெரிவித்தார். அது அரசியல் உள்நோக்கம் கொண்ட போராட்டம் எனவும், அதன் பின்னணியில் காங்கிரஸ் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்