அரசியல்

பிறந்தநாளில் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்.. திக்குமுக்காடிய ஈபிஎஸ்

தந்தி டிவி

சேலத்தில் 70 கிலோ அளவிலான பிரம்மாண்ட கேக்கை வெட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று 70வது பிறந்தநாள். இதனை ஒட்டி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில், 70 கிலோ அளவிலான பிரம்மாண்ட கேக்கை வெட்டுவதற்கு தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை ஏற்று, கேக் வெட்டிய எடப்பாடி பழனிசாமி, அனைவருக்கும் கேக்கை வழங்கி மகிழ்ந்தார். பிறகு அவருக்கு, பழ வகைகள், பூங்கொத்து, சால்வை ஆகியவற்றை வழங்கி அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க, ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருவதால், சேலம் நெடுஞ்சாலை நகர், திருவிழா கூட்டம் போல் காணப்படுகிறது.=

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி