கர்நாடகாவிலும் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என அம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கடிதம் எழுதியதை தொடர்ந்து, அங்கு பாஜக விற்கு ஆதரவளிக்குமாறு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை கழகம் அறிவித்து கடிதம் எழுதி இருந்தது. இதையடுத்து கர்நாடகாவில் அதிமுக தொண்டர்கள், பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டு சேர்ந்திருப்பதன் மூலம் கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற கூடுதல் பலம் சேர்ந்திருப்பதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். பெங்களூருவில் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.