அரசியல்

வாபர் பள்ளி வாசலுக்குள் நுழைய முயற்சி - தமிழக பெண்கள் கேரளாவில் கைது

திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் வாவர்சாமி பள்ளிவாசலுக்குள் நுழைய தமிழகத்தில் இருந்து சில பெண்கள் வருவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரளமாநிலம் கொழிஞ்சாம்பாறையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட,சுசீலாதேவி,ரேவதி, காந்திமதி,திருப்பதி, முருகசாமி ஆகியோர் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுப்ப, கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசு, வாவர் பள்ளி வாசலுக்குள் செல்லவும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

வாவர் மசூதிக்குள் பெண்கள் நுழைய முயன்றது ஏன்..? - அர்ஜுன் சம்பத் விளக்கம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்