அரசியல்

போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

தந்தி டிவி

திருவண்ணாமலை, கோவை, தென்காசி, புதுக்கோட்டை மாவட்டங்களில், பலத்த பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் சென்றனர்.கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இருந்து தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம், 3 கிலோ மீட்டர் நகர் பகுதிகளில் சுற்றி வந்து மீண்டும் அதே கல்லூரியில் முடிவடைந்த‌து. இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் பகுதியில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் ஊர்வலம், புறவழிச்சாலை வழியாகசென்று பேரணி ஆரணி கூட்டு சாலையில் முடிந்த‌து. இதில், 200 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் வடக்கூர் திடலில் இருந்து ஆர்எஸ்எஸ் பேரணி புறப்பட்டது. கடற்கரை சாலை, சந்தப்பேட்டை, முக்கிய வீதிகள் வழியாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்ற போது, மகளிர் அணியினர் மலர் தூவி வரவேற்றனர். செங்கோட்டையில் வீரவாஞ்சி திடலில் ஆர்எஸ்எஸ் கொடிக்கு மலர்கள் தூவி அணிவகுப்பு தொடங்கியது. மேலரத வீதி, கீழரதவீதி, உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்