பட்டாசு வெடிப்பது தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு முதல் என்னென்ன வெடிகள் வெடிக்க கூடாது என்பதை அரசு வரையறை செய்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.