அரசியல்

தெலுங்கானா முதல்வராகிறார் "ரேவந்த் ரெட்டி"..டெல்லியில் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு

தந்தி டிவி

தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றிக்கு காரணமாக கருதப்படும் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை முதல்வராக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. ஸ்டேடியத்தில் நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லி வந்துள்ள ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்களை சந்தித்து, தன்னை முதல்வராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு வருமாறும் அவர் நேரில் அழைப்பு விடுத்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை