அரசியல்

மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா... பெரும்பான்மையை நிரூபிப்பாரா நாராயணசாமி?

புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தந்தி டிவி

புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சபாநாயகர் இல்லத்திற்கு நேரில் சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9ஆக உள்ளது. இந்நிலையில், காங்கிரஸுக்கு 3 திமுக உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேட்சையின் ஆதரவு உள்ளதால், சட்டசபையில் அவர்களது பலம் 13 ஆக உள்ளது. எதிர்தரப்பில் என்.ஆர். காங்கிரசுக்கு 7 உறுப்பினர்களும், அதிமுகவிற்கு 4 உறுப்பினர்களும் உள்ள நிலையில், 3 நியமன உறுப்பினர்களுடன், அவர்களது பலம் 14 ஆக உள்ளது. அடுத்தடுத்து 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி, நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்