அரசியல்

"பட்னாவிஸூக்கு கிடைத்த ஆதரவால் தான் சிவசேனா வெற்றி" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மகாராஷ்டிராவில் பட்னாவிஸ், பெரும்பான்மையை நிரூபித்து, ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான நேர்மையான ஆட்சியை தருவார் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பட்னாவிஸ் முதல் அமைச்சராகவே மக்கள் ஆதரவு அளித்ததாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை பட்னாவிஸ் தருவார் என்று தெரிவித்தார். காங்., தேசியவாத காங். சூழ்ச்சி செய்து, பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டிய அவர், காங்.,தேசியவாத காங்., சிவசேனா இணைந்து ஏன் ஆட்சியமைக்க முடியவில்லை? என்று கேள்வி எழுப்பினார். பட்னாவிஸூக்கு கிடைத்த ஆதரவால் தான் சிவசேனா வேட்பாளர்கள் வென்றார்கள் என்றும் ஆனால், சிவசேனாவின் கடுமையான வார்த்தைகள் பிரதமருக்கு வலியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். பால்தாக்கரேவின் கொள்கை, கோட்பாட்டில் இருந்து சிவசேனா விலகிவிட்டதாக குறிப்பிட்ட அவர், பட்னாவிஸ் பெரும்பான்மையை நிச்சயம் நிரூபிப்பார் என்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவார் என்றும் தெரிவித்தார்.

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்