ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், அவருக்கு முழு உருவ வெண்கல சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.