சென்னை ஆவடியில், 2 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எடுக்கும் முடிவு தமிழகத்திற்கு நல்லதாக அமையும் என்றார்.