அரசியல்

ஏழு பேர் விடுதலை தொடர்பாக புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்

ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

14 ஆண்டுகள் சிறை தண்டனையை கழித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்ட பிரிவு 161-இன் படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவு என்பது அரசின் முடிவுதானே தவிர ஆளுநரின் முடிவு அல்ல என்றும், அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநரின் ஒப்புதல் என்பது ஒரு சடங்கு மட்டுமே என்றும் அந்தத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளதாக திருமாவளவன் தெரிவித்து உள்ளார். எனவே, உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பின் படி, ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை புதிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே