அரசியல்

ரஜினி, கமல், அரசியலில் சாதிப்பார்களா...? - தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு...

தற்போதைய சூழலில் ரஜினி, கமல் இருவராலும் அரசியலில் சிறப்பாக செயல்பட முடியாது என தந்தி டி.வி. கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

தற்போதைய சூழலில் ரஜினி, கமல் இருவராலும் அரசியலில் சிறப்பாக செயல்பட முடியாது என தந்தி டி.வி. கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். சீரான இடைவெளியில், ஒவ்வொரு முக்கியமான காலகட்டத்திலும், மக்களின் மனநிலையை கருத்து கணிப்பின் மூலம் தந்தி டிவி பிரதிபலித்து வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தந்தி டிவி பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகிறது. அதில், தற்போதைய சூழலில் யாராலும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற கேள்விக்கு கமல் என 15 சதவீத மக்களும், ரஜினி என 16 சதவீத மக்களும், இருவராலும் முடியாது என 69 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்