அரசியல்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் - இன்று இறுதிக்கட்ட ஆலோசனை

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தந்தி டிவி

வரும் 31ஆம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படும் என்று ரஜினி தெரிவித்துள்ள நிலையில், கடந்த 11ஆம் தேதியில் இருந்து பகுதி வாரியாக மாவட்டம் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி மற்றும் மாநில நிர்வாகி சுதாகர் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் இன்றைய இறுதிகட்ட ஆலோசனையில் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு, பூத் கமிட்டி அமைப்பு, மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்