அரசியல்

ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் - ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனவரியில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
இது குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என ரஜினி தெரிவித்துள்ளார். அற்புதம், அதிசயம் நிகழும் எனவும், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் எனவும் கூறியுள்ளார். மேலும், ஜனவரியில் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், டிசம்பர் 31ல் அதற்கான தொடக்க விழா தேதி அறிவிக்கப்படும் என ரஜினி அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளார். அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017 டிசம்பர் 31ல் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். சரியாக மூன்றாண்டுகளுக்கு பிறகு, தற்போது, புதிய கட்சி தொடங்க இருப்பது குறித்து ரஜினி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ரஜினிகாந்தின் புதிய கட்சி தொடர்பான டுவிட்டர் பதிவு இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்