அரசியல்

டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் - முன்னாள் பாஜக எம்.பி.

டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்லியில் உள்ள, பெரோஸ்ஷா சாலைக்கு ராஜேந்திர சோழன் பெயரை வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்லியில், நாடாளுமன்றம், இந்தியா கேட், செங்கோட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு இடத்தில் ராஜேந்திர சோழனின் சிலையை அமைக்க, டெல்லி மாநகராட்சி அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சிவபெருமானிடம் ராஜேந்திர சோழன் ஆசீர்வாதம் வாங்குவதை போல உள்ள சிலையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், மிகப்பெரிய கடற்படை வீரரான, ராஜேந்திர சோழன், தன்னை பெருமைப்படுத்தி கொள்வது போல் எந்த ஒரு சிலையையும் அமைத்துக்கொள்ள வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்