இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதி அளித்தார். பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்திய அரசியல் சாசனம் என்பது வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் குரல் என்று கூறினார். அரசியல் சாசனத்தைக் காப்பாற்றவே தாங்கள் போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படுவதுடன், வேளாண் பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.