சென்னையில் ராகுல் செய்த சம்பவம்.. ``ஒரு அண்ணன்கிட்ட பேசுன மாறி..’’ - மெய்சிலிர்த்த மாணவர்கள் #rahulgandhichennaivisit #rahulcmvijaymeeting தமிழ்நாட்டின் மொழி, வரலாறு மற்றும் கலாசாரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். முன்னதாக விழா மேடைக்கு வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,,, தனது உரையின் தொடக்கத்தில் திருவள்ளுவரையும் பெரியாரையும் மேற்கோள் காட்டிய அவர், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தான் எதையாவது கற்றுக்கொண்டு செல்வதாகக் கூறினார். மாணவர்களின் ஆர்வம் கேள்வி கேட்கவும், புதியவற்றை ஆராயவும், கற்பனை செய்யவும், முடிவுகளை எடுக்கவும் அதிகாரம் அளிக்கிறது என்று கூறிய ராகுல் காந்தி, மொழி, கலாசாரம், பாரம்பரியம், வரலாறு மற்றும் மண் ஆகியவை மாணவர்களின் ஆர்வத்துக்கு அடித்தளமாக இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்த ராகுல் காந்தி, தேசிய கல்விக் கொள்கையின் மூலம் தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.3,300 கோடி நிதி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். மேலும், நீட் தேர்வு காரணமாக எம்.பி.பி.எஸ். இடங்களில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் பங்கு 87 சதவீதம் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இணையச் சேவை முடக்கப்பட்டதாகவும், மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், பாஜகவினரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டின் மொழி, வரலாறு மற்றும் கலாசாரத்தை பிரதமர் மோடியால் தொடக்கூட முடியாது எனப் பேசிய அவர், அவற்றின் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.