அரசியல்

FLYING KISS கொடுத்த ராகுல்... பாஜக பெண் MP பரபரப்பு குற்றச்சாட்டு - திடீர் சர்ச்சையா? திசைதிருப்பலா?

தந்தி டிவி

மக்களவையில் உரையாற்றிய பின்னர் ராகுல் காந்தி வெளியேறும்போது, பிளையிங் கிஸ் கொடுத்ததாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பெண்களை வெறுக்கும் ஒரு நபரால் மட்டுமே பெண் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் போது நாடாளுமன்றத்திற்கு ஃபிளையிங் கிஸ் கொடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உள்ள பெண்கள் குறித்து ராகுல்காந்தி என்ன நினைக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி என்றும், இதுதான் ராகுல் காந்தியின் குடும்ப கலாச்சாரம் எனவும் சாடினார். இதனிடையே, அவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ராகுல் காந்தி, அவையிலிருந்து வெளியேறினார். பிற்பகலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ராகுல் காந்தி பாதியில் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாஜக பெண் அமைச்சர்களும், பெண் எம்.பி.க்களும், பிளையிங் கிஸ் கொடுத்த ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் அளித்தனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா