தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என ராகுல்காந்தி பேட்டி மத்திய பாஜக அரசு கொண்டு வர முற்படும், தொகுதி மறுவரையறையை தமிழ்நாட்டில் ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்... மாமல்லபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுவரையறையால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.... மேலும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் தொகுதி மறுவரையறையை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்