அரசியல்

தேர்தல் தோல்வி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்துள்ளார்.

தந்தி டிவி
மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்துள்ளார். புதுடெல்லியில், இன்று நண்பகலில் கூடிய அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தமது ராஜினாமா முடிவை ராகுல்காந்தி வெளியிட்டார். இதனால், கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். ராகுலின் முடிவை செயற்குழு உறுப்பினர்கள் திட்டவட்டமாக ஏற்க மறுத்தனர். எனவே, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ராகுல்காந்தியின் ராஜினாமா ஏற்கப்படுமா? என்பது, செயற் குழு கூட்டத்திற்கு பின்னரே தெரிய வரும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்