அரசியல்

ரபேல் விவகாரம் : பிரதமர் மீது ராகுல்காந்தி நேரடி குற்றச்சாட்டு

ரபேல் போர் விமான ஒப்பந்த பேர விவகாரத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
ரபேல் போர் விமான ஒப்பந்த பேர விவகாரத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய குழுவின் பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தி உள்ளதாக ராகுல்காந்தி புகார் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பில் இந்திய தரப்பில் அனில் அம்பானியை தேர்வு செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறியது சரியானது தான் என்பது ராணுவ அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து நிரூபணம் ஆகி உள்ளது என்றும், இது ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குற்றவாளி என்பதை காட்டுவதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்