அண்ணாமலை குறித்து வந்த கேள்வி - ஒரே வார்த்தையில் வானதி சீனிவாசன் சொன்ன பதில் #kovai #vanathisrinivasan #bjp #nda #annamalai #thanthitv கோவை வடக்கு தொகுதியில் யாருக்கு சீட் வழங்கினாலும் வெற்றிக்காக உழைப்போம் என, வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரம் VKK சாலையிலுள்ள பாஜக அலுவலகத்தில், தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் போட்டியிடவில்லை என அண்ணாமலை கடிதம் எழுதிய விவகாரம் தனக்கு தெரியாது என கூறினார். மேலும் இன்னும் 3 நாட்களில் பாஜக வேட்பாளர் பட்டியலை, பாஜக தலைமை அறிவிக்கும் எனவும் தெரிவித்தார்.