அரசியல்

பாஜகவில் இணையும் Ex முதல்வரின் மனைவி? | BJP | Congress

தந்தி டிவி

 பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கெளர் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் பின்னர், பஞ்சாப் லோ காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை தொடங்கி அதனை பாஜக உடன் இணைத்தார். இந்த நிலையில் காங்கிரசை விட்டு வெளியேறிய தனது கணவர் அமிரிந்தர் சிங்கிற்கு தனிக் கட்சி தொடங்க உதவியதற்காக காங்கிரசில் இருந்து பிரனீத் கெளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் தற்போது பாஜகவில் இணைய உள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பட்டியாலா தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு

Tasmac| நவ.1 முதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை உயர்கிறதா?

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்