அரசியல்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி வாக்குப்பதிவு: பரிசு டோக்கன்கள் பறிமுதல்

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான் குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உள்ளிட்ட 9 பேர் களத்தில் உள்ளனர். துணை ராணுவ படையினரும், புதுவை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 32 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மழை விட்டு விட்டு பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது.சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்