ஆங்கில புத்தாண்டையொட்டி , பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம் செய்தார். புத்தாண்டையொட்டி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. காலை முதலே ஆலயத்தில் திரண்ட பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமாக லட்டுகள் வழங்கப்பட்டன.