Srivilliputur | Tn Police | EX மினிஸ்டர் தலைமையில் போராட்டம்.. ஸ்தமித்த சிவகாசி ரூட்.. #Srivilliputhur #TNPolice #Sivakasi ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலி உயர்வு, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெசவாளர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாக வந்த நெசவாளர்கள், சிவகாசி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நெசவாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைக்கு அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்காததால், போராட்டம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் நெசவாளர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மற்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.