அரசியல்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்...

தந்தி டிவி

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில், மாணவர்களும், பெற்றோர்களும் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக மாணவர் மற்றும் மருத்துவர் அணிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்வார் என்றும் போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது, நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை எடுத்து வைப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’