ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவின் மகன் நர லோகேஷ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணாவில் போராட்டம் நடந்தது. அவரை விடுதலை செய்யக் கோரி, தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள், சாலையில் டயரை எரித்து போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து அங்கு திரண்ட ஒய்எஸ்ஆர் தொண்டர்கள், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரி மறியல் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.