மத்திய பாஜக அரசின், பொருளாதார மீட்பு திட்டங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், நடந்து சோர்வடைந்த தனது குழந்தையை பெட்டியில் வைத்து இழுத்து செல்லும் காட்சியை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்த பிரியங்கா காந்தி, பேரழிவு காலங்களில் இந்த இந்தியர்களைக் கூட வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாவிட்டால் எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பேச்சுக்கள், திட்டங்கள் எல்லாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், முதலில் அவர்களை வீட்டுக்குள் அழைத்து செல்லுங்கள் என்றும், பதிவிட்டுள்ளார்.