அரசியல்

சென்னையில் பிரதமர் மோடி இன்று பிரமாண்ட ரோடு ஷோ...முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

தந்தி டிவி

தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னையில் வாகன பேரணியில் பங்கேற்க இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.2 நாள் பயணமாக இன்று மாலை சென்னை வரும் பிரதமர் மோடி, பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை சாலை பேரணியில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குசேகரிக்க உள்ளார். பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிரதமரின் பேரணி நடைபெறும் பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பேரணி நடைபெறும் தியாகராய நகர் சாலை, வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல, சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசாரத்தை முடித்து கொண்டு, நாளை வேலூர் மற்றும் நீலகிரியிலும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை