அரசியல்

PM Modi | பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..நேரில் வந்த அதிபர்

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..நேரில் வந்த அதிபர்

thanthitv

PM Modi | பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..நேரில் வந்த அதிபர் உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு தாஷ்கண்ட் விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் உற்சாக வரவேற்பளித்தார். இரண்டு நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதற்கட்டமாக, இந்திய பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் (Shavkat Mirziyoyev) கட்டித்தழுவி உற்சாகமாக வரவேற்பு அளித்தார். இந்த பயணத்தின் போது இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, ஆற்றல் மற்றும் கல்வித் துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். உஸ்பெகிஸ்தான் பயணத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் நாட்டிற்குச் செல்லவுள்ளார்.

Tiruvallur Accident | ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி | கோயிலுக்கு வந்த‌போது சோகம்

Velankanni | வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த அந்த நொடி நிகழ்ந்தது!

Velankanni | வேளாங்கண்ணியில் பலூன் வெடித்து பற்றிய தீ.. கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு

MK Stalin | DMK | திமுக தலைவர் ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்

BREAKING || புதைந்த நேபாள நகரின் தற்போதைய ஷாக் வீடியோ... தோண்ட தோண்ட பிணங்கள்