புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்று கொண்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதுச்சேரியின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள என். ரங்கசாமிக்கும், எதிர்வரும் பதவிக்காலத்திற்கு நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.